ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் வெள்ளியன்று இரவு 11.47 மணியளவில் 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 91 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஜாவா தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: