புவனேஸ்வர்,

ஒரிசாவில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெண் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கால்வாயில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கோராபட் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவனை பார்ப்பதற்காக வெள்ளியன்று கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் சேர்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் போதிய ஆவணம் இல்லாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் கேண்டீன் அருகே உள்ள கால்வாயில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் , செய்தி பரவியதை அடுத்து அப்பெண்ணையும், குழந்தையும் மீட்டு சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் தாய் மற்றும் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: