அ.முத்துகிருஷ்ணன்                                                                                                                                                                            நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் நடந்த இயற்கை எரிவாயு ஊழலில் அரசிற்கு ரூ.20,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கும்….அடுத்து சமீபகாலமாக தொடர்ச்சியாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள கோளாறு பற்றிய செய்திகள் தினசரி வருவதால் அது உங்களுக்கு பசுமையாக நினைவில் இருக்கும்….

இயற்கை எரிவாயு ஊழலில் மோடியின் பங்காளியாக திகழ்ந்த “ஜியோ க்ளோபல் ரிசோர்சஸ்” நிறுவனமும் இந்த மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மைக்ரோ சிப் சப்ளை செய்யும் மைக்ரோ சிப் INC நிறுவனமும் அமெரிக்காவின் ஒரே பெரும் கம்பெனியான Key Capital Corp-ன் துணை நிறுவனங்களே….

மைக்ரோ சிப் INC நிறுவனம் மைக்ரோ சிப்களை மட்டும் சப்ளை செய்வதில்லை; மாறாக அந்த சிப்பில் பதியப்படும் மென்பொருளையும் அவர்கள் தான் தருகிறார்கள். அந்த மென்பொருளை இந்திய தேர்தல் ஆணையமோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமோ அல்லது எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்கிற பொதுத் துறை நிறுவனங்களே வாசிக்க இயலாதாம்….இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்ட, தேர்தலை ஒழித்துக்கட்ட, மக்கள் உரிமைகளை ஒழித்துக் கட்ட பாஜக செய்து வரும் வேலையின் ஒரு பகுதியே இது என்பது தெளிவாகிறது…. மீண்டும் வாக்குச்சீட்டு நோக்கி சென்றால் ஒழிய நம் உரிமைகளை மீட்டெடுக்க வாய்ப்பே இல்லை போலும்.

Leave a Reply

You must be logged in to post a comment.