டில்லி :
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  87 வது தலைவராக ராகுல் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.
கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் சோனியாவின் உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதால், அவரால் கட்சி பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சோனியா வேண்டுகோள்விடுத்தார்.
இதையடுத்து அகில இந்திய காங்கிர தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி போட்டியின்றி  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் இன்று  அவர் தலைவராக பொறுப்பேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் சோனியா காந்தி ஆகியோல் உரையாற்றினர். நேரு குடும்பத்திலிருந்து வரும் 6வது காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
ராகுல் பொறுப்பேற்பதை தொடர்ந்து இன்று காலை முதலே காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். ராகுல் பதவி ஏற்றதைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இன்று நடைபெற்ற விழாவில் ராகுல்காந்தி முறைப்படி காங்., கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரிடம் காங்கிரஸ் தேர்தல் பிரிவு செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல்   தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை  வழங்கினார். ராகுல் பதவி ஏற்றதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.