திருவனந்தபுரம்,

கேரள வனத்துறைச் சார்பில் சந்தன மரங்களை காக்கும் பணியில் முதல் முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு அருகே மறையூரில் 97 சதுர கி.மீ., சுற்றளவில் சந்தன மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வனத்துறை சார்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்பணிக்காக  வனத்துறை சார்பில் முதல் முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உடும்பனுாரைச் சேர்ந்த விஜயன் மகள் ஆதிரா மற்றும் சதானந்தம் மகள் ஸ்ரீதேவி ஆகியோர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., முடித்துள்ளனர். வனத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இவர்கள், திருச்சூரில் ஆறு மாத பயிற்சிக்குப்பின் மறையூர் வனச்சரகத்தில், நாச்சிவயல் வனத்துறை அலுவலகத்தின் கீழ் வனக்காவலர்களாக பணியாற்றுகின்றனர் .

Leave A Reply

%d bloggers like this: