பெங்களூரு,

கர்நாடக மாநிலம், தக்‌ஷின் கன்னட மாவட்டம் ஹன்னோவர் தாலுக்காவை சேர்ந்த பரேஷ் மெஸ்தா (21) காணாமல் போன இரண்டு நாட்களுக்கு பின்னர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், முஸ்லீம்களால் ஏற்படுத்தப்பட்ட இந்து – தலித் இன கலவரத்தில் பரேஷ் மெஸ்தா சித்தரவதைப்படுத்தி கொல்லப்பட்டதாக சமுக வலைத்தளங்களில் சங்பரிவார் அமைப்பினர் பெய்யான தகவல்களை  பரப்பி மாநிலம் முழுவதும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கினர்.

பரேஷ் மெஸ்தாவின் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், சாதி வெறியர்களும் , பாஜக-வினரும் இதில் தலையிட்டு இது மூலமாக இன கலவரத்தை தூண்ட முயற்சி செய்கின்றனர். பரேஷ் மெஸ்தாவிற்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என தெளிவுபடுத்திய பின்னரும் கூட, இது வலது சாரி இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சம்பவம் என்றும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா வேண்டுமென்றே இந்த சம்பவத்தை புறக்கணித்து இதை ஊக்குவிக்கிறார் எனவும் பாஜகவினர்  கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு  வருகின்றனர்.

கர்நாடக மாநில மூத்த பாஜக தலைவரும் எம்.பி.யுமான சோபா கரந்த்லஜே, பரேஷ் மெஸ்தா மரணம் தொடர்பாக டிசம்பர் 8 ஆம் தேதி முதலே தனது டிவிட்டர் பதிவுகள் மூலமாக மத சாயம் பூசி வருகிறார்.

கர்நாடகாவில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்துத்துவா ஆதரவாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவங்களின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என கூறி கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பரேஷ் மெஸ்தாவின் மரணத்திற்கு மத சாயம் பூச பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாவட்ட தலைவர் கே.ஹி.நாயக், பரேஷ் மெஸ்தாவின் உடலில் பச்சைக் குத்தப்பட்டிருந்த இந்து கடவுளான ராமர் படம் அழிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகள் வலம் வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இந்தியா டூடே பத்திரிக்கை,

          ” கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றி, ஆணுறுப்பு அறுக்கப்பட்டு,
           தலை வெட்டப்பட்டு நிலையில் ஏரியில் வீசப்பட்ட 21 வயதாக பரேஷ் மெஸ்தா-              வின் கொலை இந்தியாவை உலுக்குமா? ”

என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சில பகுதிகளில் கலவரத்தையும் தூண்டியது. கடந்த திங்களன்று மேற்கு பகுதியான கும்தா-வின் ஐஜி ஹேமந்த் நிபல்கரின் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, வன்முறை சம்பவங்களை மறுத்தாலும், அப்பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பரேஷ் மெஸ்தா-வின் மரணம் தொடர்பாக கற்பனை கதைகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரின் உடற்கூறாய்வு மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்து இந்தியா டூடே பத்திரிக்கையாளர் சிங் அரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,

  • ஆயுதங்களால் தாக்கப்பட்டது போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
  • மெஸ்தாவின் முக நிறம் தாக்குதலால் மாறவில்லை. அழுகியதால் அவர் முகத்தின் நிறம் மாறியுள்ளது.
  • அவரது உடலில் சிவாஜி படமும் மராதா என்ற வார்த்தையும் தான் பச்சைகுத்தப்பட்டிருந்தது. அது எதுவும் அழிக்கப்படவில்லை.
  • சுடு தண்ணீரோ , ஆசிட் போன்றவை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படவில்லை.
  • ஆண் உறுப்பு அறுக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் பொய்.
  • வாய் பகுதிகளிலும், நுரையீரல்களிலும் ஒரு கருமையான பொருள் படர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஆய்வு செய்வதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • தாக்குதல், துன்புறுத்தல், பட்டினி, இரத்த அழுத்தம் போன்றவைக்கான அடையாளங்கள் பெரிதாக இல்லை.
  • அவரது கை , கால்கள் கட்டப்படவில்லை. கை மட்டும் கால் விரல்கள் சாதாரண நிலையில் தான் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பியதற்காக கும்தா தாலுக்காவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்த திம்மப்பா பரமேஸ்வர் நாயக்(43) என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். பரேஷ் மெஸ்தாவிற்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என அவரது தந்தையே கூறிவரும் நிலையில் , அவர் பாஜக ஊழியர் என கர்நாடக பாஜக பலவந்தமாக கூறி வருகிறது.

திருப்பூரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிணத்திற்கு காவி சாயம் பூசுவதுதான் சங்பரிவார். ஏன்ன அதோட டிசைனே அப்படித்தான்.. என்று சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: