சென்னை,

வெரிசான் நிர்வாகம் தொழிலாளர் விரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி தமிழக தொழிலாளர் ஆணையரிடம் யூனியன் ஆப் ஐடி & ஐடிஎஸ் தொழிலாளர் சங்கத்தின் மனு அளித்தனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் வெரிசான் எனும் பன்னாட்டு ஐடி நிறுவனம் பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒலிம்பியா மற்றும் தரமனி ஆர்எம்எக்ஸ் வளாகத்தில் மென்பொருள் மற்றும் டெடா உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் 3000 க்கும்மேற்பட்ட இளம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 12.12.2017 அன்று 993  ஊழியர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாகவும் இந்த தொழிலாளர்கள் இனி வேலைக்கு வர வேண்டாம் என்று ஈமெயில் அனுப்பி உள்ளது.

வெரிசான் நிர்வாகம் , அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித முன்னரிவிப்புமின்றி சிக்கன நடவடிக்கை என்கிற பெயரால் இப்படிபட்ட சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநில அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பது இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு புறம்பானதாகும். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை யூனியன் ஆப் ஐடி & ஐடிஈஎஸ் சங்கம் (UNITE – Union of it & ites ) தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கோரி தமிழக தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் ஐடி தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் யூனியன் ஆப் ஐடி & ஐடிஎஸ் தொழிலாளர் சங்கத்தின் (UNITE – Union of it & ites ) சார்பாக இன்று மனு அளிக்கப்பட்டது. ஆணையர் அவர்களும் இந்த பிரச்சனை மீது உடனடியாக விசாரணை செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

Leave A Reply