திருவொற்றியூரில் மாநகராட்சி நிர்வாகம் வரி கொள்கையைச் சீர்ப்படுத்தி, அனைத்துப் பகுதிக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (டிச. 13) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் திருவொற்றியூர்- எண்ணூர் பகுதிக்குழு சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முத்துவாரத்தை தூர் எடுக்க வேண்டும், அனல் மின்நிலையக்கழிவுகள், சாம்பல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவேண்டும், மெட்ரோ ரயில் திட்டத்தை எண்ணூர் வரை

நீட்டிக்கவேண்டும், ரேசன்கடைகளில் அனைத்துப் பொருட்களும் முறையாக வழங்கிட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் நியமனம் செய்து உயிர்காக் கும் மருந்துகளை வழங்க வேண்டும், பல பத்தாண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஏழை குடிசைப்பகுதி மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், ராமநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் பகுதி செயலாளர் கதிர் வேல் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு), பாக்கியம்(மாதர்சங்கம்), இசக்கி(மாணவர் சங்கம்), அருமைராஜ் (வாலிபர் சங்கம்) ஆகியோர் பங்கேற்று கைதாகினர்.

Leave A Reply

%d bloggers like this: