விஜய் மல்லையாவின் கை செலவுக்கு மாதம் ரூ.4 லட்சம் வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் வசித்து வருக்கிறார். இந்நிலையில் நீதிமன்றம் மல்லையாவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு, உடனே  பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட் எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு, அரசியல் கால்ப்பு உணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது என வாதாடினார். ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் மல்லையாவின் 10,000 கோடி ரூபாய் சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விஜய் மல்லையாவின் கைச்செலவுக்கு மட்டும் வாரம்  4 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply