சேலம், டிச. 14-
சேலம் மாநகர காவல்துறையால் போடப்பட்ட பொய் வழக்கில் இருந்து 62 வாலிபர் சங்கத்தினரை புதனன்று சேலம் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொழிலாளர்கள், அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு போடுவது, சங்க தலைவர்களை தாக்குவது, ஆபாசமாக பேசுவது என சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் சந்திரசேகனை கண்டித்து கடந்த 2013ம் ஆண்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டல் உள்ளிட்ட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. இருப்பினும் கடை வியாபாரிகள் அங்குள்ள பள்ளப்பட்டி காவல் நிலைய காவலர்களுக்கு மாமூல் கொடுத்து கடைகளை இரவு பத்து மணிக்கு மேல் நடத்தி வந்தனர். இதனை கண்டித்து வாலிபர் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட 62 பேர் மீது பொய் வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், காவல்துறை ஜோடித்த இவ்வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து புதனன்று சேலம் ஜேஎம் 3 நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: