தூத்துக்குடி,
திருச்செந்தூரில் கோவில் மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள பிரகார மண்டபம் இன்று காலை இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியின் போது கிரிபிரகார மண்டபத்தின் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் பலரும் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply