தாராபுரம், டிச 14 –
தாராபுரத்தில் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவாடகைப்படி வழங்க மறுக்கும் சார்நிலை கருவூல அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் நகர் பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் வீட்டு வாடகைப்படி நகர்புறத்திற்கு உண்டான விதிமுறைகளின்படி தாராபுரம் சார்நிலை கருவூல அலுவலர் வழங்க மறுத்து வருகிறார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற சங்க நிர்வாகிளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இவ்வாறு அரசு ஊழியர்களை இழிவுபடுத்து வகையில் செயல்படும் சார்நிலை கருவூல அலுவலரின் அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், உடனடியாக வீட்டு வாடகைப்படியை வழங்கிட கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: