ஓகி புயலின் போது கடலில் சிக்கிய மீனவர்களில் 619 மீனவர்களை இதுவரை காணவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவிலும் ஓகி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிற மாநிலங்களில் கரைசேர்ந்துள்ள நிலையில், இன்னும் ஏராளமான மீனவர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மீனவர்களை தேடும் பணியில் அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் மற்றும் 186 என மொத்தம் 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: