டேராடூன்,
உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரியில் டிரக் ஒன்றின் பளுவைத் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் ஆற்றுப் பாலத்தின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் கடந்த 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. இதையடுத்து இந்த இடத்தில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிரக் இந்தப் பாலத்தில் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது பளுவைத் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் இந்தச் சாலை மூடப்பட்டதையடுத்து கங்கோத்ரி, மனேரி, ஹர்சில் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.