கோவை, டிச. 13-
கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்ததினம் மற்றும் இளைஞர் முழக்கம் ஆண்டு சந்தா ஒப்படைக்கும் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.

கோவை கணபதியிலுள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.பாலா, இன்றைய அரசியல் சூழல் மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், மகாகவி பாரதியாரின் கவிதைகள் விடுதலை போராட்ட வீரர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் கருத்துரையாற்றினார். முன்னதாக, வாலிபர் சங்கத்தின் மாத இதழான இளைஞர் முழக்கத்தின் ஆண்டு 224 சந்தாவிற்கான தொகை ரூ.26 ஆயிரத்து 840ஐ சங்கத்தின் மாநில செயலாளரிடம் வழங்கப்பட்டது. இப்பேரவையில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சீலாராஜ், நிர்வாகிகள் தீபக் சந்திரகாந்த், கோகுலகிருஷ்ணன், துரைசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.