கோவை, டிச.13-
கடுமையான விலைவாசி உயர்வு, ரேசன் மானியம் ரத்து போன்ற ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து புதனன்று பல்வேறு இடங்களில் சிஐடியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபார்க் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் மக்கள் விரோதகொள்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட பொறுப்பு செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினார்.இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வேலுசாமி, எஸ்.மூர்த்தி, கே.மனோகரன், எம்.ஏ.பாபு, வி.பெருமாள், சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, விலைவாசி உயர்வு மற்றும் மானிய விலையிலான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை சித்தரிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் காய்கறி மாலை அணிந்தும், எரிவாயு உருளையை தலையில் சுமந்தும் முழக்கங்களை எழுப்பினர்.

உதகை:
உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பாக்கியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் விஜயன், எஸ்.ரமேஷ், ரங்கசாமி, விஜயக்குமார், ஆறுமுகம், சண்முகம், சுந்திரம்,செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.

சேலம்:
சேலத்தில் கோட்டை மைதானம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சிஐடியு சங்கத்தினர் பேரணியாக சென்றனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், பொருளாளர் வி.இளங்கோ, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஆர்.வைரமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு சூளை பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க நகர தலைவர் சி.கே.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியுமாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆர்.
ரகுராமன், மின்வாரிய செயலாளர் சி.ஜோதிமணி, பொதுத் தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

%d bloggers like this: