ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றி, மக்கள் ஜனநாயகம் நிறுவப்பட்டபின்னர்தான்,  சோசலிசத்தை நோக்கி இந்திய மக்கள் முன்னேற முடியும்.  இந்திய நிலைமைகளில் சோசலிசம் என்பதன் பொருள் என்ன? மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வரையிலும், சோசலிசம் குறித்த திட்டம் குறித்துத் தெளிவாக எதுவும் சொல்லமுடியாது. எனினும், நாம் நம் முந்தைய தத்துவார்த்த ஆவணங்களில் கூறியுள்ள புரிந்துணர்வுகளின் அடிப்படையில் நம் நாட்டில் சோசலிசத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும் என்கிற பொதுவானதோர் உருவரையை நாம் அளித்திட முடியும்.

  • அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழுமையான வேலை ஆகியவற்றுடன் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி ஆகியவற்றை அளித்தல் என்பதே இதன் பொருள். நாட்டிலுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், நலிந்த பிரிவினரின் வாழ்வாதார நிலைமைகளைப் பெரிய அளவில் மேம்படுத்துவதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் பொருளாதார,  அரசியல் மற்றும் சமூக நிலையில் அதிகாரத்தை  அளிப்பது என்பதே இதன் பொருள்.
  • முதலாவதும், முதன்மையானதும் மக்களின் அதிகாரமே எல்லாவற்றிற்கும் உயர்வானது என்பதே இதன் பொருள். ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், குடி உரிமைகள் சமூகத்தின் சட்டவியல், அரசியல் மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதக் கூறுகள் என்பதே இதன் பொருள்.  முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ், மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பது போலத் தோன்றும். அது மாயைதான். பெரும்பான்மையான மக்களுக்கு அவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தக்கூடிய  வல்லமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும்.  சோசலிசத்தின் கீழ், ஜனநாயகம் என்பது அனைத்து மக்களுக்கும்  பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில்  அமைந்திருக்கும். அத்தகைய அடித்தளம் தொடர்ந்து ஆழமாக்கப்படுவதன்மூலம் மனிதகுல வாழ்க்கையை மேலும் தரப்படுத்துவதன் மூலமும் சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் வளர்ந்து செழித்திடும். சோசலிசத்தின் கீழ் தொழிலாளிவர்க்க ஆட்சியின்கீழ் சோசலிசத்தை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு , கருத்து வேறுபாட்டிற்கான உரிமை, பேச்சுரிமை மற்றும் பல்வகையான கருத்துக்கள் வளம் பெற்று செழித்திடும்.
    சாதிய அமைப்பு முறை ஒழித்துக்கட்டப்பட்டு, சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது இதன் பொருள். அனைத்து மொழி பேசுவோருக்கும் சமம் என்பதும் அனைத்து மொழிகளும் சம அளவில் வளர்ச்சி பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது இதன் பொருள். அனைத்துச் சிறுபான்மையினர் மற்றும்  நலிந்தபிரிவினருக்கு உண்மையான சமத்துவம் அளிக்கப்படும் என்பதும் பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படும் என்பது இதன் பொருள்.
  • சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம் உற்பத்திச் சாதனங்கள் சமூகவுடைமையாக்கப்பட்டதன் அடிப்படையிலும், மத்தியத் திட்டத்தின் அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது இதன் பொருள். பண்ட உற்பத்தி முறை இருக்கும் வரையிலும், சந்தை என்பதும் இருந்திடும். எனினும், சந்தை சக்திகள் மத்தியத் திட்டத்தின் வழிகாட்டுதலுக்கு உட்படுத்தப்படும். சொத்துடைமையின் பல்வகையான வடிவங்களும் தொடர்ந்து இருந்திடும் அதே சமயத்தில், தீர்மானகரமான வடிவம் என்பது உற்பத்திச் சாதனங்களின் சமூகவுடைமையே இருந்திடும். இவ்வாறு கூறுவதால், அனைத்தும் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறையாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒரு முக்கியமான பங்கிளை செலுத்தக்கூடிய அதே சமயத்தில், கூட்டு உடைமை மற்றும் கூட்டுறவு உடைமை போன்ற இதர வடிவங்களும் மற்றும்
  • பொருளாதார வாழ்க்கையை முறைப்படுத்தக்கூடிய விதத்தில்  பொருளாதாரக் கொள்கைகளில் அரசின் கட்டுப்பாடும் தொடர்ந்து நீடித்திடும்.

-சீத்தாராம் யெச்சூரி
(நன்றி:ப்ரண்ட்லைன்) தமிழில்: ச.வீரமணி

Leave A Reply

%d bloggers like this: