தாராபுரம், டிச 13 –
தாராபுரம் அரசு ஐடிஐயில் 53 லேப்டாப்கள் மாயமானது குறித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் அரசினர் ஐடிஐயில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 31.10.2014 அன்று ஐடிஐ முதல்வர் ஆய்வு செய்தபோது, 53 லேப்டாப்கள், 55 லேப்டாப் கவர்கள் மாயமானது. ஆனால், அறையின் பூட்டோ, ஐன்னலோ, கூரையோ உடைக்கப்படவில்லை. இதையடுத்து லேப்டாப் மாயமானது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் ஐடிஐ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லேப்டாப்கள் மாயமானது குறித்து குற்றப்பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave A Reply