கோவை டிச 12-
கோவையில் விபத்து ஏற்படுத்தும் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் இருந்து பூச்சியூர் வரை செல்லும் சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மிக மோசகமாக காணப்படுகிறது. இதனால் இச்சாலைகளில் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருன்றனர். எனவே, இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை சிபிஎம் நரசிம்மநாயக்கன் பாளையம் கிளைச் செயலாளர் ஜி.புலிகேசி தலைமையில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.