ராமநாதபுரம்,

நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்தன. மேலும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 23 மீனவர்களை கைது செய்ததுடன், 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மேலும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: