ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் மாயமாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு பல இடங்களில் பனி மூடி உள்ளது. இந்நிலையில் பந்திப்போரா அருகே குரேஷ் செக்டாரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் மாயமானார்கள். பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள் மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.