சென்னை,
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே, பம்மல் பகுதியில் உள்ள, திருவள்ளுவர் நகர் ரங்கநாதன் குடியிருப்பில் வசிக்கும் தாமோதரன். இவர், தனது தாயார் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி ஆகியோரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்றார்.  இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தாமோதரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழில்நஷ்டம் காரணமாக அவர் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply