திருப்பூர், டிச.12 –
திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் உபகுழுவின் சார்பில் சிறப்புகருத்தரங்கம் கே.ஆர்.சி சிட்டி செண்டரில் திங்களன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு திவ்யபிரியா தலைமை தாங்கினார். இதில் அறம் பேசும் சமூக அறம் எனும் தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா மற்றும் பத்மாவதி கருத்துரிமையின் பொருள் என்ற தலைப்பில் சமூக செயல்பாட்டாளர் பாரதி செல்வா ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்நந்தகோபால், செயலாளர் மணிகண்டன், கௌசல்யா, சண்முகபிரியா, கீர்த்தனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.