பரந்த அணுகுமுறையில் நோக்கினால் விதையின் சேமிப்புக்காலம் என்பது வினையியல் முதிர்ச்சியில் ஆரம்பித்து முளைக்கரு வளர்ச்சி அதாவது விதை முளைப்பில் முடிகிறது. விதைகள் அதிகபட்ச உலர் எடை அடையும் போது அவை வினையியல் மற்றும் புற வளர்ச்சி பெற்றிருப்பதாக கருதவேண்டும். இந்நிலையில் விதைகளின் ஈரப்பதம் குறைத்தல் (அ) உலர்தல் நடைபெறும். விதையின் உலரும் தன்மை வினையியல் முதிர்ச்சி பெற்ற பின்னர் மற்றும் கதிரடித்தல் அறுவடைப் பணிக்கு ஏதுவான ஈரப்பதம் அடையும் வரைத் தொடர்ந்து குறையும்.இந்த நிலை தான் அறுவடை முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. வினையியல் முதிர்ச்சி மற்றும் அறுவடை முதிர்ச்சிக்கு இடைப்பட்ட காலம் தான் விதைச் சேமிப்பின் முதல் கட்டம் ஆகும். விதைகள் அறுவடை முதிர்ச்சி பெற்ற பின் காலம் தாழ்த்தி அறுவடை செய்தால் அவற்றின் தரம் குறைந்து விடும்.

விதைச் சேமிப்பின் இரண்டாவது கட்டம் அறுவடை முதல் தொடங்கி நிலைப்படுத்துதல் வரை முடியும். விதைக் குவியல்கள் விதைக் கிடங்கில் மற்றும் விதை சேமிப்பு கொள்கலன்கள் போன்ற விதைகள் பையிலிடும் போது அவற்றின் தரத்தைப் பாதிக்கும் காரணிகளாகும். நிலைப்படுத்துதல் முதல் பையிலிடுதல் வரை விதைச் சேமிப்பின் மூன்றாம் கட்டம் ஆகும். பையிலிடப்பட்ட விதைதான் நான்காம் கட்ட விதைச் சேமிப்பு ஆகும். பையிலிடப்பட்ட விதைகள் விநியோகம் மற்றும் விற்பனை செய்வது அடுத்தக் கட்ட சேமிப்பு ஆகும்.

இறுதி நிலைச் சேமிப்பு என்பது விதைக்கும் முன்பும் பின்பும் பண்ணைகளில் சேமிப்பது ஆகும்.
விதைச் சேமிப்பின் பொழுது விதை உற்பத்தியாளர் கையாளும் கட்டுப்பாடு, அறுவடை முதல் விநியோகம் வரை அதிகபட்சமாகவும், விநியோகம் விற்பனை முதல் பண்ணை சேமிப்பு வரையில் குறைந்தபட்சமாகவும் வேறுபடும். கட்டுப்பாட்டு நிலைகள் வேறுபட்டு இருந்தாலும், விதை உற்பத்தியாளர் விதைச் சேமிப்பின் கட்டங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். விதைத் தரத்தைப் பராமரிக்கும் அனைத்துச் செயல்களும் கட்டாயமாக செய்யப்படவேண்டும்.

சேமிப்பு முறை;                                                                                                                                            

சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் சேமித்தல் : விதைகளை பல அடுக்குகளாகவும், ஒரே அடுக்காகவும் சாக்குகள் (அ) திறந்த கொள்கலன்களிலும், மழையிலிருந்து பாதுகாத்து, காற்றோட்ட வசதியுடன், எலிகளின் தாக்குதல் இல்லாமல், பல மாதங்கள் சேமிப்பது இம்முறை ஆகும். ஈரப்பத கட்டுப்பாட்டில் உலர் சேமிப்பு : மென்தோல் விதைகளைக் குறைந்த ஈரப்பதம் (48 சதவிகிதம்) மற்றும் அடைக்கப்பட்ட கொள்கலனில் (அ) ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட அறையில் சேமித்தால் அவற்றின் வீரியம் நீண்ட காலம் குறையாமல் இருக்கும். சமன்படுத்தப்பட்ட சுற்றுப்புற ஈரப்பதத்தில் சேமிப்பதைக் காட்டிலும் இம்முறை சிறந்ததாகும். குளிர் நிலை மேலும் சாதகமானது ஆகும்.

ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டில் உலர் சேமிப்பு : விதைக்கும் காலவறை அதிகமுள்ள மென்தோல் பயிர் விதைகளுக்கு இம்முறை பயனளிக்கும். இவ்விதைகள் அதிக அளவிலான காடு வளர்ப்பு திட்டங்களுக்கு உபயோகப்படுகின்றன. 4-8 சதவிகிதம் ஈரப்பதம் மற்றும் 0.5 டிகிரி செ வெப்பநிலையில் சேமிப்பது விதைகளின் வீரியம் 5 வருடங்கள் மற்றும் அதற்கும் மேலாக பராமரிக்கப்படுகின்றது.

நீண்டகால மரபணு பாதுகாப்பிற்கான உலர் சேமிப்பு : மென்தோல் விதைகளின் மரபணு பாதுகாவலுக்கு தேவையான வெப்பம் -18 டிகிரி வெப்பநிலையில் மற்றும் ஈரப்பதம் 5-11 சதவிகிதம் ஆகும்.

வெப்பம் மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தாத ஈரநிலை சேமிப்பு : கடினதோல் விதைகளை குளிர் காலத்தில் சில மாதங்கள் சேமிக்க இம்முறை உகந்ததாகும். விதைகளை தளத்தில் குவியல்களாகவும், ஆழம் குறைந்த குழிகளிலும், நல்ல வடிகால் வசதியுடைய மண்களிலும் (அ) காற்றோட்ட வசதியுள்ள கிடங்குகளிலும், சேமிக்கலாம். அவற்றின் மேல் இலைகள், ஈரமண், மக்கு (அ) காற்றடைவெளி பொருட்கள் கொண்டு மூடாக்குகள் போடவேண்டும். ஈரப்பத சேமிப்பின் போது ஏற்படும் அதிக சுவாச அளவினால் உண்டாகும் வெப்பத்தை குறைப்பதற்கு, குளிர்ந்த ஈரப்பதம் மற்றும் காற்றோட்ட வசதியை இம்முறையில் பயன்படுத்தப்படுகிறது. குவியல்களை அடிக்கடி கிளறி விடுதல் வெப்பம் உண்டாவதைத் தடுக்கும். வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு உறைவு நிலை சேமிப்பு : விதைகளை திரவ நைட்ரஜனில் -196 டிகிரி செ வெப்பநிலையில் சேமித்தல் வேண்டும். எளிமையாக கையாளுவதற்கும் பாதுகாப்பிற்கும். விதைகள் வாயு நிலையில் உள்ள திரவ நைட்ரஜனில் -150 டிகிரி செ வெப்பநிலையில் உறையவைக்கவேண்டும். இந்த உறை நிலையில் அனைத்து வளர்சிதை மாற்ற நிகழ்வுகளும் செயலற்ற நிலையை அடைந்து விடும். உயிரணுக்கள் அனைத்தும் திரவ நைட்ரஜனில் இருந்து எடுத்து பின் உறைநிலையை அகற்றும் வரையில் மாறாத நிலைமையில் இருக்கும். இந்நிலையில் வினையியல் நிகழ்வுகள் குறைந்த அளவில் நடைபெற்று விதையின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும். வணிக ரீதியாக விதைச்சேமிப்பிற்கு இம்முறை சாத்தியமற்றதாக இருந்தாலும், சிறப்புமிக்க விதைக்கருவூல சேமிப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகும். ஈரம் புகும் அடைப்பான்
விதைச் சேமிப்பு கிடங்குகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தும் வசதி இருப்பின், ஈரம் புகும் அடைப்பான்களில் மென்தோல் விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்து பல வருடங்கள் சேமிக்கலாம். (எ.கா) பருத்தி பைகள், காகித அட்டைப்பெட்டிகள், அட்டைப்பெட்டிகள்.

ஈரம் புகா அடைப்பான்
மென்தோல் விதைகளை தேவைப்படும் ஈரப்பதத்திற்கு உலர்த்திய பின்னர், விதைகளை அடைக்கப்பட்ட ஈரம் புகா அடைப்பான்களில் சேமிக்கலாம். இப்படிச் செய்வது விதைகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் தேவையைக் குறைக்கிறது. ஈரம் புகா அடைப்பான்களைக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பது நீண்ட காலச் சேமிப்பிற்கு உதவும். இம்முறையில் ஆக்ஸிஜன் வாயுவை காலச் சேமிப்பிற்கு உதவும். இம்முறையில் ஆக்சிஜன் வாயுவை தடுக்கும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. தடித்தோல் விதைகளுக்கு இம்முறை பொருந்தாது.

ஈரம் தடுக்கும் அடைப்பான்
பாலித்தீன் (அ) பிளாஸ்டிக் (அ) அலுமினியத் தகடுகள் இவ்வகைப்படும். நீண்டநேரம் ஈரப்பதம் பைகளினுள் புகாமல் இருக்கும் ஆயினும் நீராவியானது மெல்லியதாக ஊடுருவி அடைப்பானின் உள்ளும் வெளியும் உள்ள ஈரப்பதத்தைச் சமன்படுத்தும். மென்தோல் விதைகளுக்கு பாலித்தீன் பைகள் உகந்ததல்ல. ஏனெனில் அதில் ஈரப்பதம் ஊடுருவலின் கட்டுப்பாடு இல்லாததே காரணமாகும். குறுகிய கால (அ) நடுத்தரக் கால சேமிப்பிற்கு இது பயன்படும்.

சேமிக்கும் பொழுது விதையின் வீரியம் கட்டுப்பாடு நன்கு முதிர்ந்த விதைகளை சேமிக்கவேண்டும்.இயல்பான நிறம் கொண்ட விதைகளைச் சேமிக்கவேண்டும்.
விரிசல் முதலியவற்றிலிருந்த விடுபட்டு இருக்கவேண்டும்.சேமிப்பில் பூஞ்சாண் (அ) நுண்ணுயிரித் தாக்குதல் இருக்கக்கூடாது.முதிர்ச்சியின் போது சாதகமில்லாத சூழ்நிலைகளைத் தடுக்கவேண்டும்.அவ்வப்போது சேமிப்பு பூச்சிகள் தாக்குதலைத் தடுக்க சேமிப்புக் கிடங்கில் வாயு நச்சு செலுத்தவேண்டும்.சேமிப்புக் கிடங்கு மற்றும் சூழ்நிலை குளிர்ந்த மற்றும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.விதைகளைத் தேவையான ஈரப்பதத்திற்கு உலர்த்தவேண்டும்.
தேவையான அளவு காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை சேமிப்பின் போது பராமரிக்கவேண்டும்.பூஞ்சாணக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
விதைகளை சேமிப்பதற்கு தகுந்த பைகளைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.

விதைச் சேமிப்பை பாதிக்கும் காரணிகள்;
1.உயிர்க் காரணிகள்.                                                                                                                                              2. உயிரற்ற காரணிகள்

உயிர்க் காரணிகள்: விதையின் மரபியல்தன்மை, முன் விதைத்தரம், விதையின் பிறப்பிடம்- தோற்றம், விதையின் ஈரப்பதம்.

மற்ற உயிர்க் காரணிகள்: பூச்சிகள், பூஞ்சாண், எலிகள், மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வின் போது கையாளும் விதம்

உயிரற்ற காரணிகள்: வெப்பநிலை, ஈரப்பதம், விதைச் சேமிப்புச் சுகாதாரம், வாயு மண்டல சூழ்நிலை, அடைக்கும் பொருள்கள் – சேமிக்கும் பைகள்.
சேமிப்பு அமைப்புகள்

தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையின் உணவுத் தானியத் தேவையை சமன் செய்ய விதைகளின் அறுவடை மற்றும் அதற்குப் பின் இழப்பைக் குறைக்கவேண்டும். மக்களுக்குத் தேவையான மற்றும் சமமான அளவில் ஆண்டு முழுவதும் விநியோகம் செய்ய விதைகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் சேமிக்கப்படுகின்றன. இந்தியாவில் அறுவடையின் பின் சார் இழப்புகள் 10 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளன.

அவற்றுள் சேமிப்பில் இழப்புகள் மட்டும் 6.58 சதவீதமாக உள்ளது. ஆனால் இன்றைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விதை உற்பத்தியாளர்கள் விதைகளை நீண்ட காலம் சேதமடையாமல் சேமிக்கும் வசதிகள் உள்ளன.

விதைச் சேமிப்பின் சுகாதாரம் – கிடங்கின் சுகாதாரம்;சேமிக்கும் சுற்றுப்புறம் பூச்சிகள் மற்றும் எலிகளின் தாக்குதல் இருக்கக்கூடாது.இராசயன பொருள்களான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை விதைகளுடன் சேமிக்கக்கூடாது.சேமிக்கும் அறை குளிர்ந்த மற்றும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
வாயு நச்சு இடுதலை தேவைப்படும் போதெல்லாம் இடவேண்டும்.விதைப் பைகளை மரத்தட்டுக்களில் குறுக்கும் நெடுக்குமாக அடுக்கினால் பைகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் காற்றோட்ட வசதி கிடைக்கும்.

விதைகளின் அடர்த்தியைக் கொண்டு விதைப் பைகளை 6-8 அடுக்குகளாக அடுக்கவேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் அடுக்கி வைப்பது விதை வீரியத்தை நீண்டகாலம் சேமிக்கும்.சேமிக்கும் முன் விதைக்கிடங்குகளை மாலத்தியான் 50 சதவிகிதம் ஈசி @ 5 லிட்டர் – 100 எம்எல் கொண்டு தெளித்து தொற்று நீக்கவேண்டும்.பழைய சாக்குகள், துணிப்பைகள் மற்றும் கொள்கலன் பயன்படுத்தும் போது அலுமினியம் பாஸ்பைட் கொண்டு வாயு நச்சு செய்யவேண்டும்.

அடுக்குகளின் அளவு 30ஒ20 அடி இருப்பது வாறு தடுக்கும் (அ) பாலித்தீன் மூடாக்குகளின் உள்ளே வாய்நச்சு செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செய்யவேண்டும். மாலத்தியான் 50 சதவிகிதம் ஈசி @ 5 லிட்டர் – 100 மீட்டர் என்ற அளவில் 3 வாரங்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.

வாயுநச்சு அடிக்கடி செலுத்துவது விதைகளின் வீரியம் மற்றும் முளைப்புத் திறனை குறைத்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 14 சதவிகிதம் மேல் ஈரப்பதம் உள்ள விதைகள் வாயு நச்சு செலுத்தும் முன்னரே ஈரப்பதத்தை குறைக்கவேண்டும்.

பி.ஆர் ரங்கநாயகி மற்றும் ம.உமாதேவி
மரப்பயிர் இனப்பெருக்கத் துறை
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம், மெட்டுப்பாளையம்-641 303

Leave A Reply

%d bloggers like this: