உலக மனித உரிமைகள் தினம், பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் குறித்து அனைத்திந்திய ஜனநாயாக மாதர் சங்கம் மற்றும் தோழி கூட்டமைப்பு சார்பில் பென்னாகரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, பெண்கள்,குழந்தைகள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது பொருளாதாரம், அரசியல், சமூக ரீதியாக வன்முறைகள் தொடர்கிறது. நுண்நிதி நிறுவனங்கள் தமிழகத்தில் பெண்களுக்கு கடன் கொடுக்கிறது. பிறகு இவற்றை கந்து வட்டியாக வசூல் செய்கிறது. இதனால்ஏராளமான பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட கந்துவட்டியை அரசு அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும் சரி, பாஜக இருக்கும் போது சரி பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதே கிடையாது. ஒக்கி புயலால் இறந்தமீனவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு வேலையும், ரூ. 25 லட்சம் நிவாரணமும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சரியான மீட்பு பணி நடைபெறவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களையும், மீனவர்களையும் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வராக எடப்பாடி உள்ளார்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் கவனம்செலுத்துவது கண்டனத்திற்குரியது என்றார் அவர்.கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை தாங்கினார். தலைவர் ஏ.ஜேயா வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா, தோழி கூட்டமைப்பு இயக்குனர் எம்.சங்கர், நேசம் என்.ஜி.ஓ இயக்குனர் எம்.கே. மகேந்திரன், சேவா என்.ஜி.ஓ இயக்குனர் துரைசாமி, எஸ்எம்டி இயக்குனர் வி.தனலட்சுமி, மாதர் சங்க பொருளாளர் பி.ராஜாமணி, துணைத் தலைவர்கள் கே.பூபதி, கே.சுசிலா, துணைச் செயலாளர் தனலட்சுமி, மாவட்டகுழு உறுப்பினர் சுதாபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply