நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கோரி ஐநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் திட்டமான கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை இந்த மாவட்டத்தில் பல கிராமங்களில் அமலாக்கவில்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு நபருக்கு சராசரி 30 நாள்கள் வரை தான் இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி ஒவ்வொரு மனுநீதி நாளன்றும் ஓவ்வொரு ஊராட்சியிலிருந்து பெண்கள் தங்களுக்கு வேலை கேட்டு மனு கொடுக்கிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி, சுக்காம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் வேலை வழங்கவில்லை என்று பெண்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். தங்களுக்கு இந்த ஆண்டு 20 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கே.சம்சுதீன்,விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.கண்ணன், சித்துவார்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜமால்முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: