சிம்லா
சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்துக்குட்பட்ட ராம்பூர் வழியாக நார்மன்ட் சாலை மலைப்பாதையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாதையை விட்டு விலகி அருகாமையில் உள்ள பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.
இது குறித்து இன்று காலை கிடைத்த தகவலின்படி சம்பவத்துக்கு விரைந்துவந்த குலு மாவட்ட வட்டாட்சியர் தலைமையிலான மீட்புப் படையினர் பள்ளத்தில் சிக்கி இறந்து கிடந்த ஒரு பெண், குழந்தை உள்பட ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: