சிவகங்கை;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 22ஆவது மாநாடு திருப்புத்தூரில் டிசம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

உமாநாத்,திருநாவுக்கரசு,மணியம்மா ஆகியோர் தலைமை வகித்தனர். 9ஆம் தேதி மாலை பேரணியும் பொதுகூட்டமும் நடந்தது. 10 ஆம் தேதி காலை நடந்த பிரதிநிதிகள் மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தொடங்கிவைத்தார்.

மாவட்ட மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் இரா. ஜோதிராம் பேசினார்.
மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக மு.கந்தசாமி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.கே. தண்டியப்பன், வீரையா, கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரபாண்டி, மோகன், வேணுகோபால், பொன்னுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர்களாக ஜெயராமன், முருகேசன், மணியம்மா, சிவக்குமார், திருநாவுக்கரசு, அழகர்சாமி, அய்யம்பாண்டி, சுரேஷ், காந்திமதி, உமாநாத், மதிஆறுமுகம், தெட்சிணாமூர்த்தி, உலகநாதன், விஜயகுமார், ஜோதிநாதன், ஈஸ்வரன், சாந்தி, செல்வராஜ், சண்முகப்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.