கிருஷ்ணகிரி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 22வது மாநாடு 9, 10 தேதிகளில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை சேதுமாதவன் ஏற்றி வைத்தார்.

இருதயராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் நாகரத்னா தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சேகர் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பாபு நன்றி கூறினார். மாநாட்டில் 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக எஸ். ஆர். ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஆர். சேகர், எக்ஸ். இருதயராஜ், வி. சாம்ராஜ், எஸ். ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வி. கோவிந்தசாமி, எஸ். அழகிரிசாமி, ஜி.கே.நஞ்சுண்டன், டி. சுரேஷ் ஆகியோரும் மாவட்டக்குழு உறுப்பினர்களாக டி. ராஜா, எம்.பாபு, ஓ.ஜி. மூர்த்தி, டி. கோதண்டராமன், டி. நாராயணமூர்த்தி, எம். ரவி, எஸ். முனியப்பா, யசோதா, அனுமப்பா, சந்திரசேகர், டி. நாகரத்னா, சின்னசாமி, எம். அண்ணாமலை, கே.எம். எத்திராஜ், எஸ். வெண்ணிலா, டி. வெங்கடேஷ், டி.மாரப்பா, சி. பிரகாஷ், நாகராஜ், ஜீவா, பாஞ்சாலி ராஜன், கோபி, கே.சி. ராமசாமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய, தலித், மலை வாழ் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு இம் மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று மாநாடு அறைகூவல் விடுத்தது.

ஓசூர் பகுதியில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பி.எப் உறுப்பினராக உள்ளதால் பிஎப் கிளை அலுவலகம் ஓசூரில் உடனடியாக திறக்க வேண்டும், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும், மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையான ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில்பாதையை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.