திருவனந்தபுரம்,
கேரளாவில் ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தையும், கேரளத்தின் சில பகுதிகளையும் கடுமையாக தாக்கியது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓகி புயலினால் மாயமாகினர். அவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. கேரளத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஓகி புயலினால் உயிரிழந்துவிட்டனர். அது குறித்த கணக்கெடுப்பை எடுத்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அந்த 28 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியது.
ஆனால் தமிழகத்தில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க தமிக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்று தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கன்னியாகுமரி , நாகை , கடலூர் மாவட்ட மீனவ மக்கள் தொடர்ந்து ரயில் மறியல் சாலை மறியல், உட்பட பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கேளராவைச் சேர்ந்த மீனவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி ஓகி புயல் பாதிப்புகளை நேரில் வந்து பார்வையிட வேண்டும். மத்திய அரசு உரிய நிதி உதவியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் அமைதியான வழியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணியில் ஈடுபட்ட மீனவர்களில் ஒரு பிரிவினர் ஆளுநர் மாளிகையை நோக்கி செல்கின்றனர். மேலும் ஒரு பகுதியின் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: