கவுகாத்தி,

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் உயிரிழந்தன.

அசாம் மாநிலம் சோனிப்பூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது கவுகாத்தி – நகர்குலம் விரைவு ரயில் மோதியது. இதில் 6 யானைகள் உயிரிழந்தன. கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இயற்கைக்கு மாறான முறையில் 140-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாக வன விலங்கு ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.