புயல் மழையால் ஏற்பட்ட மின்தடையால் அவதியுறும் தக்கலை பகுதி மக்களுக்கு
வேலூர் மாவட்டம் பூங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களது சிறு பங்கை அளித்து
அதன் வாயிலாக 12 கிலோ மெழுகுவர்த்திகளை சேகரம் செய்து அனுப்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அதன் சுற்று பகுதியில் ஒக்கி புயல் மழையால் ஏற்பட்ட மின்தடையால் தக்கலை பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தி அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த பகுதி மக்களால் அதிக விலை கொடுத்து வாங்கமுடியாத சூழல் நிலவி உள்ளது அவர்களுக்கு மெழுகுவர்த்தி உதவிகளை செய்யுமாறு சிலர் முகநூலில் பதிவு செய்துவந்துள்ளனர்.

இதனை அறிந்த வேலூர் மாவட்டம் பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் செலவுக்காக அவர்களின் பெற்றோர்கள் கொடுத்த சிறிய தொகையை அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து 12 கிலோ மெழுகுவர்த்திகளை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி உள்ளனர். அவர்களின் இந்த பங்களிப்பை பார்த்து பலர் பாராட்டுகளையும், அவர்களும் வாங்கி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply