பெரம்பலூர்,டிச.10-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட 7-வது மாநாடு டிசம்பர் 9 அன்று பெரம்பலூரில் ஜே.கே.மண்டபத்தில் தோழர் டி.முருகேசன் நினைவ ரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.என்.துரைராஜூ கட்சிக்கொடியேற்றினார். மாநாட்டிற்கு பி.துரை சாமி, எ.கலையரசி, அருண் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் என்.செல்லத்துரை வரவேற்புரையாற்றினார்.  மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.  மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை நிறை வுரையாற்றினார். வர வேற்புக்குழு பொருளாளர் ஆர். முருகேசன் நன்றி கூறினார்.

மாநாட்டில் 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. கட்சி மாவட்டச் செயலாளராக ஆர்.மணிவேல் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக என்.செல்லதுரை, ஆர்.அழ கர்சாமி, எம்.இளங்கோவன், பி.துரைசாமி, கே. மகாராஜன், எ.கலையரசி, பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின் ஆகியோரும், மாவட்டக்குழு உறுப்பினர்களாக எஸ்.என்.துரைராஜ், எ.சவுரிராஜன், ஆர்.இளங்கோவன், ஆர்.இராஜகுமாரன், எஸ்.மீனா, எ.கந்தசாமி, வி.பரமசிவம், ஆர்.புனிதன், எ.கணே சன், எஸ்.பி.டி.ராஜாங்கம்,பி.பத்மாவதி, எ.அருண் பாண்டியன், எம்.வெங்கடா சலம், ஆர்.முருகேசன், ஜே.ராதாகிருஷ்ணன், ஏ.கே.ராஜேந்திரன், டி.அறி வழகன், எஸ்.மலர்கொடி, எ.தங்கராசு, கே.சிவக்குமார், மு.ப.அண்ணாதுரை, ஆர்.சிற்றம்பலம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.