ஐதராபாத், டிச. 10-
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர்(30) . இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலை.யில் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர்நெட்வொர்க்கிங் மற்றும் டெலிகம்யூனி கேசன்ஸ் படித்து வருகிறார். அவர் சனியன்று மர்ம நபர் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகாகோவில் உள்ள பூங்கா அருகே தனது காரை எடுக்க சென்ற போது அக்பரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான். கன்னத்தில் குண்டுபட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளான். எங்களது மகனை பார்க்க அமெரிக்கா செல்வதற்கு அவசர விசா வழங்க சுஷ்மா உதவி செய்ய வேண்டும் என அக்பரின் தந்தை கோரியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: