ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வியாழக்கிழமையன்று (டிச. 8) சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்சி அணி, கொல்காத்தாவின் ஏடிகே அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் முன்னாள் சாம்பியன்கள் என்பதால்  ஒரு சிறப்பான கால்பந்து ஆட்டத்தை காண வேண்டும்  என்ற  ஆர்வத்தில் 17 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர்.

ஆட்டம் தொடங்கிய 3 வது நிமிடத்திலேயே ஏடிகே அணி வீரர் பிபின் சிங் சென்னையின் கோல் கம்பத்தை நோக்கி சூட் செய்த பந்து கரன்ஜித் சிங் கைகளில் சிக்கி கொண்டது. அதன்பிறகு 7 வது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் அவர்களுக்கு கோல் கிடைக்கவில்லை. 27 வது நிமிடத்தில் சென்னை வீரர் இனிகோவை ஏமாற்றி கொல்கத்தா வீரர் பிபின் கொண்டு சென்று சூட் செய்த பந்தை சென்னையின் கரன்ஜித் சிங் தடுத்தார். இதனால் அவர்களுக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அதற்கு பிறகு கிடைத்த மற்றொரு கார்னரும் வாய்ப்பாக மட்டுமே சென்று விட்டது. 

35 ஆவது நிமிடத்தில் டெல்லி வீரர் ஸெகியூனா கோல் கம்பத்தை டைரக்ட் சூட் செய்ய அதை கரன்ஜிங் சிங் தடுத்துவிட்டார். 39 ஆவது நிமிடத்தில் ஜெஜெ கொடுத்த பாஸை அழகாக ஏடிகே அணியின் பாக்சுகுள் எடுத்துச் சென்று கோல் அடிக்க முயற்சி செய்தார் காவிலன். ஆனால் அது சிறிது இடைவெளியில் வெளியில் கோல் கம்பத்தை விட்டு விலகி சென்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 38 ஆவது நிமிடத்தில் பிக்ரம்ஜித் சிங் கொடுத்த பாலை ஜெஜெ எடுக்க முடியாத காரணத்தால் நல்ல கோல் வாய்ப்பை சென்னை தவறவிட்டது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

47ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெர்ரி கடத்திக் கொடுத்த பந்தை, சக வீரர் நெல்சன் எதிரணி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். அதுவும் அதன்பிறகு 50 நிமிடத்தில் கிடைத்த மற்றொரு வாய்ப்பும் பலன் அளிக்காமல் போனது. 

65ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை காவிலன் அடிக்க அதை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சி செய்தார் செரீனா. ஆனால் வெளியே சென்ற அதை மீண்டும் தலையால் முட்டி அசத்தலான கோல் அடித்தார் ஜெஜெ. ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த தொடரில் தனது முதல் கோலை சொந்த மண்ணில் பதிவு செய்தார் ஜெஜெ. 

 

 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் தோய் சிங் கொடுத்த பாஸை இனிகோ எடுத்து கோல் கம்பத்தை நோக்கி சூட் செய்தார். அதை ஏகேடி தடுத்துவிட்டார். அவர் தடுத்த அந்த பந்தை மீண்டும் கோல் கம்பத்தில் புகுத்தி அற்புதமான கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஜெஜெ. ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஏடிகே அணியை வீழ்த்தியது. அத்துடன், புள்ளிப்பட்டியலில், முதல் இடத்திற்கும் முன்னேறியது.

 

ராஜுவிற்கு சமர்ப்பணம்

சென்னை நேரு மைதான பராமரிப்பாளர்களில் ஒருவரான ராஜூ கடந்த மாதம் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போட்டி தொடங்கும் முன்பு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதால் இந்த வெற்றி ராஜூவிற்கு சமர்ப்பணம் செய்வதாக சென்னை அணியின் அதிகாரப் பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: