காத்மாண்டு
நேபாளத்தில் இன்று காலை 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று முன் தினம் வட இந்தியாவின் தில்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.45 மணியளவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் பூமியின் மிக ஆழமான பகுதியில் ஏற்பட்டதால் மக்களால் உணரப்பட வில்லை.

இந்நிலையில் இன்று காலை 8.21 மணியளவில் நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேச விபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை

Leave A Reply