கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர்பீ ஆகியோர் போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் முக்கிய தலைவர் அமித் ஷா மற்றும் குஜராத் மாநில உயர் அதிகாரிகளின் பங்கு பற்றி சிறப்பு சிபிஐ நீதிபதி லோயா விசாரித்து வந்தார். 2010 ஜூலை மாதம் அமித் ஷா இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டு பம்பாய் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அமித் ஷாவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக 100 கோடி ரூபாய் லஞ்சம் லோயாவிற்கு வழங்குவதற்கு அப்போதைய பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மோஹித் ஷா முன்வந்ததாக லோயாவின் சகோதரி அனுராதா பியானி அண்மையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சோராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்து, அவருடைய குடும்பத்தார் தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகும் நிலவுகின்ற மவுனம் ஆச்சரியம் அளிப்பதாகவும், அந்த மர்ம மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடற்படை முன்னாள் தலைவர் எல்.ராம்தாஸ் அனுப்பியிருக்கும் கடிதத்தை, தங்களுடைய கடிதத்துடன் இணைத்து இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுர் ஆகியோருக்கு இந்திய அரசாங்கத்தின் 32 ஓய்வு பெற்ற அதிகாரிகள் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். நீதிபதியின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளாகிய நாங்கள் முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் எல்.ராம்தாஸ் அவர்கள் முன்வைத்துள்ள உயர்மட்ட விசாரணை என்ற கோரிக்கைக்கு எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம். இந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டுகிறோம். நீதிபதி லோயா கட்டாயம் நாக்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் சேர்ந்து அப்போது பயணித்த இரண்டு நீதிபதிகளின் மவுனம் வருத்தமளிப்பதாகவும், நீதிபதி லோயாவின் குடும்பத்தார் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு விடை காணும் வகையிலும், இந்திய மக்களின் பார்வையில் நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்படும் வகையிலும் இந்த மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அட்மிரல் ராம்தாஸ் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. .

அவர்கள் தங்களுடைய மனுவில் ஓய்வு பெற்ற பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி பி.எச்.மர்லபெல்லே, முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஆகியோரின் கடிதத்தையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதத்தில் கையெழுத்து இட்டிருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்;

1.        எஸ்.பி.அம்ப்ரோஸ், கப்பல் போக்குவாரத்துத் துறை முன்னாள் கூடுதல் செயலாளர்

2.        இஸ்ரத் அஜீஸ், பிரேசில் நாட்டு முன்னாள் தூதர்

3.        ஜி.பாலகோபால், வடகொரியா யூனிசெஃப் பிரதிநிதி

4.        சுந்தர் புர்ரா, மகராஷ்ட்ரா முன்னாள் செயலாளர்

5.        கல்யாணி சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்

6.        விபா புரிதாஸ், இந்திய அரசாங்க பழங்குடியினர் துறை முன்னாள் செயலாளர்

7.        கேசவ் தேசிராஜு, இந்திய அரசாங்க முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர்

8.        எம்.ஜி.தேவசகாயம், ஹரியானா மாநில முன்னாள் செயலாளர்

9.        சுசில் துபே, ஸ்வீடன் நாட்டு முன்னாள் தூதர்

10.     ஃபேபியன், இத்தாலி நாட்டு முன்னாள் தூதர்

11.     மீனா குப்தா, இந்திய அரசாங்க சுற்றுச்சூக்ஷல், வனத்துறை முன்னாள் செயலாளர்

12.     தீபா ஹரி ஐஆர்எஸ், பணியிலிருந்து ராஜினாமா செய்தவர்

13.     சஜ்ஜத் ஹாசன், மணிப்பூர் மாநில முன்னாள் திட்ட ஆணையர்

14.     ஜான் கோஷி, மேற்கு வங்க மாநில முன்னாள் தகவல் துறை ஆணையர்

15.     அஜய்குமார் ஐஎஃப்எஸ், பணியிலிருந்து ராஜினாமா செய்தவர்

16.     அருண் குமார், முன்னாள் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையர்

17.     ஹர்ஷ் மந்தர், மத்தியப்பிரதேச மாநிலம்

18.     அதிதி மேதா, ராஞஸ்தான் மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்

19.     சுனில் மித்ரா, இந்திய அரசாங்க நிதித்துறை நுன்னாள் செயலாளர்

20.     தேப் முகர்ஜி, நேபால் நாட்டு முன்னாள் தூதர்

21.     அனூப் முகர்ஜி, பீகார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர்

22.     அலோக் பேர்தி, இந்திய அரசாங்க நிலகக்ரித்துறை முன்னாள் செயலாளர்

23.     என்.கே.ரகுபதி, இந்திய அரசாங்க ஊழியர் தேர்வு வாரிய முன்னாள் தலைவர்

24.     அருணா ராய், பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்

25.     மணப் ராய், மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்

26.     உம்ராவ் சலோடியா, ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்து நிறுவன முன்னாள் தலைவர்

27.     தீபக் சனன், ஹிமாச்சல பிரதேச முதலமைச்சரின் முன்னாள் தனி ஆலோசகர்

28.     ஈ.ஏ.எஸ்.சர்மா, இந்திய அரசாங்க நிதித்துறை பொருளாதா விவகாரங்களுக்கான முன்னாள் செயலாளர்

29.     டாக்டர்.என்.சி.சக்சேனா, இந்திய அரசாங்க திட்டத்துறை முன்னாள் செயலாளர்

30.     அர்தேந்து சென், மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர்

31.      டாக்டர்.ராஜு சர்மா, உத்தரப் பிரதேச மாநில வருவாய் வாரிய உறுப்பினர்

32.     ஜவஹர் சர்கார், முன்னாள் பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி

https://thelogicalindian.com/news/judge-loya-encounter-probe/

– தமிழில்:- முனைவர் தா.சந்திரகுரு

Leave A Reply

%d bloggers like this: