கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓகி புயல் அறிவிப்பிற்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை முறையான தகவல்கள் வெளியாக வில்லை. ஓகி புயலின் தாக்கத்திற்கு பின் பத்து நாட்கள் கடந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசு மெத்தப்போக்குடன் நடந்து கொள்வதாக மீனவ கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில் நேற்று 8 கிராமங்களைச் சேர்ந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் 25 கி.மீ தரம்வரை பேரணியாக நடந்து சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் வாபஸ் பெற்று மக்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
இதையடுத்து இன்று குமரி மாவட்டம் குளச்சலில் மீனவர்கள் பொதுமக்கள் பேரணியாக நடந்து வந்து  குளச்சல் பேருந்து நிலையத்தில்   மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்கள், கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தியும் மத்திய மாநிலங்களுக்கு எதிராக ஆவேச கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் 25 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சாலை போக்கு வரத்து ஸ்தம்பித்துள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: