பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரசியல் ‘அறிவியல்‘ (political science) துறையின் கேள்வித்தாளில் அறிவியலுக்குப் புறம்பான கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. GST பற்றி கௌடில்யர் என்ன கருதினார் என்பதுதான் கேள்வி. மேற்படி நபர் அர்த்தசாஸ்திரம் எழுதியவர். முதல் இந்து சாம்ராஜ்ஜியம் என்று வர்ணிக்கப்படுகிற குப்த சக்கரவர்த்தியின் ஆலோசகராக இருந்தவர். அவர் இறந்து இன்றைய நிலையில் 2300 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் GSTபற்றிய ஒரு கேள்வியில் தன்னைப் பிணைப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்.

அப்படியிருக்க இன்றைய மாணவர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? மிகவும் இரக்கம் உள்ள ஆசிரியர்கள் இதற்கு மாற்றாக (Chocie) ஒரு கேள்வி கேட்டிருக்கின்றனர்.

‘’உலகமயம் பற்றிய முதலில் யோசித்தவர் மனுதான். விவரிக்கவும்’’. இதுதான் அந்தக் கேள்வி.

அந்தக் காலத்தில் இருந்த இந்தக் காலம் வரை, சமூகத்தைப் பார்ப்பனியத்தால் சிறையிட்ட மனுவுக்கும் உலகமயத்துக்கும் ஸ்நான பிராப்தி கூட இருக்க வழியில்லையே! வேறு என்ன சம்பந்தம்?

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் இந்துப் பிற்போக்குதான் ஒரே சம்பந்தம்.

மேற்படி கேள்விகளைப் பற்றி தனக்குத் தெரியாது என்று political science துறை தலைவர் கையைக் கழுவிவிட்டார்.

இப்படியான மூடத்தனங்களைப் பல்கலைக்கழகங்களில் அரங்கேற்றும் காவி முட்டாள் தனத்தைக் கண்டு வாயால் சிரிக்க வழியில்லை

Leave A Reply

%d bloggers like this: