மதுரை,
மதுரை அருகே வாகனம் மோதியதில் ஆடு மேய்த்தவர்கள் மற்றும் 28 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் வடுகப்பட்டி காலனி அருகே ஆடு மேய்த்த ரங்கசாமி என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஆடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 28 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply