ஜெய்ப்பூர் ,

பாஜக ஆளும் ராஜஸ்தானில் லவ் ஜிகாத் என்ற பெயரில் மேற்கு வங்க இளைஞர் ஒருவரை சங்பரிவார் கும்பலை சேர்ந்த ஒருவர் கொடாரியால் கொடூரமாக வெட்டியும், எரித்தும் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்துவிட்டு லவ்ஜிகாத்தில் இருந்து சிறுமியை பாதுகாக்கவே இவ்வாறு செய்ததாக கூறி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது அப்ரசூல். இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்து வந்தார். இந்நிலையில் ராஜ்சாமாந்த் மாவட்டத்தில் இந்து பெண்ணிடம் அன்பு கொண்டதாகவும், அதனால் அதனை  லவ் ஜிகாத்த என்றும், அவர் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் அப்ரசூலை சரமாரியாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார். இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக எடுத்து , சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை ஐ.ஜி ஆனந்த் ஸ்ரீவத்சவ், தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராஜஸ்தானில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா கரத், மேற்கு வங்கத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த இளைஞரை லவ் ஜிகாத் என்ற பெயரில் எரித்துக் கொன்றது கொடூரமான குற்றம் என கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற சங் பரிவார இயக்கங்கள் நாட்டில் ஏற்படுத்தி வரும் மதவாத சூழலே இதுபோன்ற வன்முறைகளுக்குக் காரணம் என்றும் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கொலைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: