மதுரை;
மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தா நுழைய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மிகப் பழமையான ஆதீனங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இவரால், கடந்த 2012-ஆம் ஆண்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா, பின்னர் அவராலேயே நீக்கப்பட்டார். மடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தா தொடர்ந்து முயற்சித்த வந்ததால், பல நூறுகோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கவே, நித்யானந்தா ஆதீனத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நித்யானந்தா, மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஆர். மகாதேவன், நித்யானந்தா ஆதீனத்திற்குள் நுழைவதற்கான தடையையும் நீட்டித்தார்.

Leave A Reply

%d bloggers like this: