திருப்பூர், டிச.7-
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிஎஸ்என்எல் அனைத்து சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பிரித்து செல்பேசி கோபுரங்களுக்கு தனி துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய ஊதிய மாற்ற விகிதத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோரை பிஎஸ்என்எல் அனைத்து சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Leave A Reply