இராசிபுரம், டிச. 7-
தமிழக அரசு நாடக கலையை வளர்க்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டத்தினை கற்பிக்க வேண்டும் என தமுஎகச நாமக்கல் மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இராசிபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தனசேகரன் வரவேற்றுப் பேசினார். இப்பேரவையில் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவராக பார்த்திபன், செயலாளராக வி.பி.கருணாநிதி, பொருளாளராக சங்கர், துணை தலைவராக வி.அருள், துணை செயலாளராக ஆர்.ராகேஷ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்;
இப்பேரவையில் பத்மாவதி திரைபடத்திற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். தமிழக அரசு நாடக கலையை வளர்க்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டத்தினை கற்பிக்க வேண்டும், இன்டியன் எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனர் வரதாராஜீ நாயுடுக்கு இராசிபுரத்தில் நினைவு மண்டபத்தினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாநில குழு உறுப்பினர் முருகேசன் நிறைவுரை ஆற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: