திருப்பூர், டிச.7-
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் இளம்பெண்கள் உபகுழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள விவசாய சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளராக சமீரா தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் அஷ்ரப், இளம்பெண்கள் உபகுழுவின் நிர்வாகிகள் சண்முகபிரியா, கௌசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply