திருச்செங்கோடு, டிச. 7-
பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தபடி காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 35 ஆண்டுகாலம் பணிபுரிந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் அறிவித்த 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.கண்ணகி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் ஏ.பாலசுப்ரமணியம் துவக்க உரையாற்றினார். அங்கன்வாடி சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பாண்டிமாதேவி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து துறைஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர்கே.எஸ்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கதிர்வேல், வட்ட பொருளாளர் டி.தனசேகரன், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க கே.சங்கர், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எம்.கணேஷபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கே.தமிழரசி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆடசியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரகமத்பீ தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.செல்லபாண்டியன் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம். அதேபோல், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பிரேமா தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் இளங்கோ துவக்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், நம்பியூர் டி.என்.பாளையம் ஆகிய பகுதியில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அங்கன் வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: