திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் படுமோசமாக இருந்த சாலை தொடர்பாக கடந்த வாரம் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த பின்னணியில் மாநகராட்சி நிர்வாகத்தார் சாலை சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர். எனினும் போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள காலை நேரத்தில் இப்பணியை மேற்கொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இரவு நேரங்களில் இது போன்ற பணிகளைச் செய்யலாமே என்று வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.

Leave A Reply