சென்னை,
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் ஜாமினில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் எம்.நடராஜனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நடராஜன் நாடியிருந்தார். நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சரணடைய உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்காததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: