சிட்னி;
ஓர் பாலினத்தவர் திருமண சட்ட மசோதாவுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.ஓர் பாலினத்தவர் திருமணச் சட்ட மசோதாவுக்கு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், மேலவையில் இந்த மசோதா தொடர்பான இறுதிவாதம் நடைப்பெற்று வந்தது. அதன் முடிவில் 155 உறுப்பினர்களில் 150 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், மேலவையிலும் ஓர் பாலினத்தவர்கள் திருமணச் சட்ட மசோதா நிறைவேறியது.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் ஓர் பாலினத்தவர் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், ஆஸ்திரேலியாவில் ஓர் பாலினத்தவர் திருமணங்கள் நடைபெற உள்ளன.ஏற்கெனவே நாடாளுமன்ற எம்.பி. மற்றும் விளையாட்டு வீராங்கனை உள்பட பலர் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்காக தங்களது ஜோடியை தேர்வு செய்து காத்திருக்கின்றனர்.
ஓர் பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கிய 26-ஆவது நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நாள் மிகவும் சிறந்த நாள் என ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: