குளைச்சல்
குளைச்சலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சலில் உயிரிழந்த மீனவர் டேவிட் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூற சென்றார். அங்கு திரண்ட ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்களும், பெண்களும் முற்றுகையிட்டதால் ஆளுநர் அங்கிருந்து தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகி புயலால் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆகியும் மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு உதவவில்லை என்று மீனவர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ள நிலையில் ஆளுநர்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: